முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

0
முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு - அண்ணா பல்கலை அறிவிப்பு!!
முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு - அண்ணா பல்கலை அறிவிப்பு!!
முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்ட படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 20-ஆம் தேதி முதல் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் நடக்க உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தேர்வாணைய குழு தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு:

அண்ணா பல்கலைகழகத்தில் எம்பிஏ, எம்சிஏ, எம்இ மற்றும் எம்டெக் போன்ற முதுகலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கண்ட முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 20-ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாக அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம்- புதுச்சேரி அரசு அறிவிப்பு!!

இதன்படி எம்சிஏ மற்றும் எம்பிஏ படிப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் மாதம் 20-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. எம்இ, எம்டெக் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு மார்ச் 21-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இந்த தேர்வினை 2 மணி நேரம் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

‘குவாண்டம் மெக்கானிக்ஸ்’ இலவச ஆன்லைன் படிப்பு – ஐஐடி பாம்பே அறிவிப்பு!!

இந்த தேர்வுகள் குறித்த விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக்கழக அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் வருகிற ஜனவரி 19-ஆம் தேதி முதல் பிப்ரவரி 12-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு அதன் முடிவுகள் வருகிற ஏப்ரல் 16-ஆம் தேதி வெளியிடப்படும் என்ன அண்ணா பல்கலைக்கழக தேர்வாணைய குழு தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here