ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம்- புதுச்சேரி அரசு அறிவிப்பு!!

0
ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம்- புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம்- புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம்- புதுச்சேரி அரசு அறிவிப்பு!!

புதுச்சேரி உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்க மேல்நிலை பள்ளிகளில் பயிலும் எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாணவர்களில் பட்டியலை வருகிற ஜனவரி 13-ஆம் தேதிக்குள் அனுப்ப ஆதிதிராவிட நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்வி உதவித்தொகை:

புதுச்சேரியில் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் முன்னேறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2020-21 ஆம் ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. எனவே புதுச்சேரியில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விவரங்களை சேகரித்து வருகிற ஜனவரி 13-ஆம் தேதிக்குள் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

‘குவாண்டம் மெக்கானிக்ஸ்’ இலவச ஆன்லைன் படிப்பு – ஐஐடி பாம்பே அறிவிப்பு!!

இதுகுறித்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடி நலத்துறை இயக்குனர் யஷ்வந்தையா கூறுகையில், “2020-2021-ஆம் ஆண்டுக்கான ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நல உதவித்தொகை திட்டத்தில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. எனவே புதுச்சேரி பெறும் மேல்நிலை பள்ளி (11, 12) மாணவர்கள், கல்லூரி, மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பான விவரங்களான, தந்தை பெயர், பயிலும் கல்வி, 2020-2021 ஆம் ஆண்டுக்கான கல்வி கட்டணம் குறித்த விவங்களை மத்திய அரசு ஜனவரி 15-ஆம் தேதி அனுப்ப உத்தரவிட்டுள்ளது. எனவே பள்ளிகள் ஆதிதிராவிட இயக்கத்திற்கு ஜனவரி 13-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்”, என தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here