‘குவாண்டம் மெக்கானிக்ஸ்’ இலவச ஆன்லைன் படிப்பு – ஐஐடி பாம்பே அறிவிப்பு!!

0
'குவாண்டம் மெக்கானிக்ஸ்' இலவச ஆன்லைன் படிப்பு - ஐஐடி பாம்பே அறிவிப்பு!!
'குவாண்டம் மெக்கானிக்ஸ்' இலவச ஆன்லைன் படிப்பு - ஐஐடி பாம்பே அறிவிப்பு!!
‘குவாண்டம் மெக்கானிக்ஸ்’ இலவச ஆன்லைன் படிப்பு – ஐஐடி பாம்பே அறிவிப்பு!!

மும்பையில் உள்ள ஐஐடி-யில் குவாண்டம் மெக்கானிக்ஸ் குறித்த இலவச ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கான தேர்வுகள் வருகிற ஏப்ரல் 25-ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த பயிற்சிக்கு பி.டெக் பிசிக்ஸ், பி.டெக் எலக்ட்ரிகல், எம்.எஸ்.சி பிசிக்ஸ், எம்.எஸ்.சி கெமிஸ்ட்ரி படித்த மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.

மாணவர்களுக்கான இலவச பயிற்சி:

ஐஐடி பாம்பே சார்பில் குவாண்டம் மெக்கானிக்ஸ் பாடம் குறித்த இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. குவாண்டம் இயக்கவியல் என்பது இயற்பியலின் ஒரு அங்கமாகும். இந்த படிப்பில் சேர ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த படிப்பு குறித்த புரிதல் இருக்க வேண்டும். குறிப்பாக வேவ் பங்சன், சுரோடிங்கர் சமன்பாடு, எக்ஸ்பெக்டேஷன் வேல்யூஸ் போன்றவை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

தமிழக பள்ளிகளில் தொழிற்கல்வி பாடங்கள் கட்டாயமாக்கப்பட வேண்டும் – ஆசிரியர்கள் கழகம் மனு!!

இது குறித்து பாம்பே ஐஐடி இயற்பியல் துறை பேராசிரியை பி.ரமாதேவி கூறுகையில், “குவாண்டம் மெக்கானிக்ஸ் படிப்பு 12 வார காலமாக நடத்தப்படும். வருகிற 18-ஆம் தொடங்கப்பட்டு ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்த படிப்பில் லினியர் வெக்டார் ஸ்பேஸ், கிளாசிக்கல் யங் குவாண்டம் மெக்கானிக்ஸ், பௌண்ட் ஸ்டேட்டஸ், ஃபங்சன் பேஸஸ், இண்ட்ரடக்ஷன் டூ குவாண்டம் மெக்கானிக்ஸ் உள்ளிட்ட பிரிவுகள் குறித்து வகுப்புகள் நடத்தப்படும்.

தமிழகத்தில் ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறப்பு – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!!

இந்த இலவச படிப்பை நேஷனல் புரோகிராம் ஆன் டெக்னாலஜி என்ஹான்ஸ்டு லேர்னிங் தொலைநிலை கல்வியை வழங்கும் நிறுவனம் மூலமாக ஐஐடி வழங்குகிறது. இந்த நிறுவனம் மூலமாக ஐஐடி-பாம்பே, ஐஐடி-டெல்லி, ஐஐடி-கான்பூர், உள்ளிட்ட ஐஐடிகளிலும், ஐஐஎஸ்ஸி-பெங்களூரு உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலும் தொலைதூர கல்வி வழங்கப்படுகிறது. இதில் சேர ஆர்வமுள்ளவர்கள் ஜனவரி 25-ஆம் தேதிக்குள் ஐஐடி நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த படிப்பிற்கான சான்றிதழ் பெற ரூ.1000 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த சான்றிதழ்களை ஐஐடி-பாம்பே மற்றும் என்பிடிஇஎல் ஆகியவை இணைந்து வழங்கவுள்ளன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!