அண்ணா பல்கலை எம்.டெக் பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை – ஏஐசிடிஇ பதில்மனு!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக் பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை ரத்து செய்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) பதில்மனு தாக்கல் செய்துள்ளது.
எம்.டெக் மாணவர் சேர்க்கை:
அகில இந்திய நுழைவுத்தேர்வின் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக் பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், தமிழக அரசின் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற மறுப்பு தெரிவித்து பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி படிப்புகளின் சேர்க்கை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உள்நாட்டு விமான சேவை கட்டண உயர்வு – மத்திய அரசு அனுமதி!!
இந்த வழக்கு விசாரணையில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் AICTE பதில்மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதில் எம்.டெக் பாடப்பிரிவு நிறுத்தப்படாது, தொடர்ந்து நடத்தப்படும் என அண்ணா பல்கலை தெரிவித்தது. மேலும் தமிழக அரசின் இடஒதுக்கீட்டை அமல்படுத்த கூடுதல் இடங்கள் உருவாக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டது. இன்று AICTE பதில்மனு தாக்கல் செய்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
அதில் அண்ணா பல்கலைக்கழகத்தில் குறிப்பிடப்பட்ட 2 எம்.டெக் பாடப்பிரிவுகளிலும் மாணவர்களை சேர்க்க முடியாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதற்காக நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடு டிசம்பர் மாதத்திற்குள் முடிந்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது தவிர்க்க முடியாத சூழலில் காலநீட்டிப்பு வழங்க முடியுமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாநில அரசு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாட முடியுமா என கூறி உள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்