அண்ணா பல்கலை M.Tech மாணவர் சேர்க்கை நடக்குமா?? மாணவர்கள் எதிர்பார்ப்பு!!

0
அண்ணா பல்கலை M.Tech மாணவர் சேர்க்கை நடக்குமா?? மாணவர்கள் எதிர்பார்ப்பு!!
அண்ணா பல்கலை M.Tech மாணவர் சேர்க்கை நடக்குமா?? மாணவர்கள் எதிர்பார்ப்பு!!
அண்ணா பல்கலை M.Tech மாணவர் சேர்க்கை நடக்குமா?? மாணவர்கள் எதிர்பார்ப்பு!!

நடப்பு கல்வியாண்டிற்கான M.Tech பாடத்தில் சில பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை இதுவரை நடத்தப்படாத காரணத்தால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மிகுந்த மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் பல்கலை நிர்வாகம் விரைந்து நடவடிக்கைகளை எடுத்து மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

M.Tech சேர்க்கை:

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 2020-2021ஆம் கல்வியாண்டிற்கான M.Tech படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு அக்டோபர் 2020 இல் வெளியிடப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க மத்திய அரசு சார்பாக நடத்தப்பட்ட கேட், கேட் – பி மற்றும் டான்சென்ட் ஆகிய நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இந்த தேர்வுகளில் அகில இந்திய அளவில் முதல் 200 இடங்களை பெற்ற மாணவர்கள் இதற்காக விண்ணப்பித்து இருந்தனர்.

கல்லூரி மாணவர்களுக்கான கலை சொல்லாக்கத்திற்கான விருது- விண்ணப்பங்கள் வரவேற்பு!!

மேலும் இந்த பட்டியலில் முதல் 30 இடங்களில் சேலம், சென்னை மற்றும் மதுரை மாணவகர்லா இடம் பிடித்த நிலையில், அவர்களுக்கு இதுவரை கலந்தாய்விற்காக எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை. இது குறித்து தெரிவித்த மாணவர்கள், M.Tech பாடப்பிரிவில் 45 இடங்கள் இதுவரை நிரப்பப்படாமல் உள்ளது. இது குறித்து பல்கலையிடம் பல முறை முறையிட்ட பொழுதும் விளக்கம் அளிக்கப்படவில்லை.

திருக்கோயில் பணியாளர்களுக்கு ‘பொங்கல் போனஸ்’ – இந்து அறநிலையத்துறை அறிவிப்பு!!

மேலும் கலந்தாய்விற்கும் அழைக்காத காரணத்தால் எண்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளது. பல்கலை அதிகாரிகளின் மெத்தன போக்கின் காரணமாக 45 இடங்கள் நிரப்பப்படாமல் வீணாகி விட்டதா? என கேள்வி எழுப்பி உள்ள மாணவர்கள், பதிவாளர் இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கோரி உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here