திருக்கோயில் பணியாளர்களுக்கு ‘பொங்கல் போனஸ்’ – இந்து அறநிலையத்துறை அறிவிப்பு!!

0
திருக்கோயில் பணியாளர்களுக்கு 'பொங்கல் போனஸ்' - இந்து அறநிலையத்துறை அறிவிப்பு!!
திருக்கோயில் பணியாளர்களுக்கு 'பொங்கல் போனஸ்' - இந்து அறநிலையத்துறை அறிவிப்பு!!
திருக்கோயில் பணியாளர்களுக்கு ‘பொங்கல் போனஸ்’ – இந்து அறநிலையத்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள திருகோயில்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என இந்து அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் அறிவித்து உள்ளார். இதனால் திருக்கோயில் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொங்கல் போனஸ்:

தமிழர் திருநாளான தைப்பொங்கல் வரும் ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஏற்கனவே அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 உட்பட பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்களுக்கு ரூ.3000 மற்றும் சத்துணவு பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் என பிற ஊழியர்களுக்கு ரூ.1500 போனஸ் வழங்கப்பட உள்ளது.

பிப்ரவரி 25ஆம் தேதி “தேசிய பசு அறிவியல் தேர்வு” – மத்திய அரசு அறிவிப்பு!!

இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், தற்போது திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் வெளியிட்ட அறிக்கையில், 2019-2020 ஆம் ஆண்டில் 240 நாட்கள் பணிபுரிந்தவர்களுக்கு ரூ.1000 மற்றும் அதற்கு குறைவாக பணி செய்தவர்களுக்கு பணிபுரிந்த நாட்களின் எண்ணிக்கை அடிப்படையில் போனஸ் தொகை வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

பிப்ரவரி 26 முதல் செமஸ்டர் செய்முறை தேர்வுகள் தொடக்கம் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

அதுமட்டுமின்றி முதுநிலை மற்றும் முதுநிலையில்லாத அனைத்து திருக்கோயில் பணியாளர்களுக்கும் ரூ.1000 பொங்கல் போனஸ் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் பணிபுரியும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here