மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்கள் – அண்ணா பல்கலையில் 276 காலியிடங்கள்!!

0
மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்கள் - அண்ணா பல்கலையில் 276 காலியிடங்கள்!!
மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்கள் - அண்ணா பல்கலையில் 276 காலியிடங்கள்!!
மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்கள் – அண்ணா பல்கலையில் 276 காலியிடங்கள்!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள், மருத்துவ படிப்பு கலந்தாய்வில் இடம் கிடைத்து சென்ற விட்டதால் நடப்பு கல்வியாண்டில் இன்ஜினியரிங் பிரிவில் 276 இடங்கள் காலியாக உள்ளதாக பல்கலை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மருத்துவ கலந்தாய்வு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இம்முறை மருத்துவ கலந்தாய்வு தாமதமாக தொடங்கியது. தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேரடி கலந்தாய்வு நடைபெற்றது. இம்முறை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு நடைமுறை அமல்படுத்தப்பட்டதால், முதலில் அவர்களுக்கான இடங்கள் நிரப்பப்பட்டன. பின்னர் உருமாறிய கொரோனா தொற்று காரணமாக 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெறுவது சற்று தாமதமானது.

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!!

இதனால் பல மாணவர்கள் ஆன்லைன் மூலம் நடைபெற்ற இன்ஜினியரிங் கலந்தாய்வில் கலந்து கொண்டு அண்ணா பல்கலையில் சேர்ந்தனர். இதில் அண்ணா பல்கலைக்கழக வளாகம் மற்றும் பல முதன்மை கல்லூரிகளில் உள்ள இன்ஜினியரிங் இடங்கள் முழுவதுமாக நிரப்பப்பட்டது. பின்னர் மருத்துவ கலந்தாய்வு 2வது கட்டமாக நடத்தப்பட்டதால் அதில் கலந்து கொண்ட மாணவர்கள் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்ததும் பொறியியல் படிப்புகளில் இருந்து விலகி உள்ளனர்.

இந்திய கணக்கு தணிக்கையாளர் (சிஏ) தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!!

இதன் விளைவாக தற்போது அண்ணா பல்கலை மற்றும் முதன்மை கல்லூரிகளில் 276 இன்ஜினியரிங் இடங்கள் காலியாக உள்ளன. இன்ஜினியரிங் கலந்தாய்வு முன்கூட்டியே நடத்தப்பட்டு, மருத்துவ கலந்தாய்வு அதன் பின்னர் தாமதமாக நடைபெற்றதே இதற்கு காரணம் என கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!