“இந்தியை திணித்தால் நானே எதிர்ப்பேன்”…!! ஆந்திர துணை முதல்வர் அதிரடி பேச்சு…!!
கடந்த சில நாட்களாகவே மும்மொழி கொள்கை, தொகுதி மறுவரையரை, இந்தி திணிப்பு, PM ஸ்ரீ பள்ளி போன்ற கொள்கைகள் அரசியல் ஆடுகளத்தில் முக்கிய பேச்சு பொருளாக மாறியுள்ளது. அத்துடன் இதனை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. இதனால், மாநில மற்றும் மத்திய அரசுக்கிடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், மத்திய பாஜக அரசின் “தேசிய முற்போக்கு கூட்டணியில்” உள்ள முக்கிய பிரமுகர் கூறியுள்ள கருத்து தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
போரிடும் நாடுகளுடன் இந்தியா நட்புடன் உள்ளது…!! வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்…!
அதாவது, தேசிய முற்போக்கு கூட்டணியில் உள்ள ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், “பல திமுக எம்பிக்கள் இந்தியை பேசுகிறார்கள். ஆனால் மக்கள் முன் வந்து இந்தியை எதிர்க்கிறார்கள். கண்முடித்தனமாக எதிர்ப்பதை நான் விரும்பவில்லை. தேசிய கல்விக்கொள்கை இந்தியை திணிக்கவில்லை. ஆனால் திணித்தால் நானே எதிர்ப்பேன்” என்று கூறியுள்ளார். மேலும், தென்னிந்தியாவில் இந்த கொள்கைக்கு எதிர்ப்பு நிலவி வரும் சமயத்தில், பாஜக கூட்டணியில் உள்ள ஒருவர் கூறிய கருத்து அக்கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


























