PPF திட்டத்தில் முதலீடு செய்ய போறீங்களா..?? தவறுதலாக கூட இதை பண்ணிடாதிங்க.. இல்லைனா அக்கவுண்ட் காலி தான்..!!

0

நீண்ட கால முதலீடு செய்து நிலையான வருமானத்தை ஈட்ட விரும்பும் தனிநபர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் சரியான தேர்வாகும். இத்திட்டம் ஆனது இந்திய அரசு மூலமாக ஆதரிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலமாக பல்வேறு வரிப் பலன்கள் கிடைப்பதோடு, ஆபத்து இல்லாமல் அதிக வருவாய் ஈட்டவும் உதவுகிறது. இந்நிலையில் ஒரு தனிநபர் PPF கணக்கு நிர்வகிக்க பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறை ஒன்றை பற்றி இப்பதிவில் காண்போம்.

மாதந்தோறும் ஓய்வூதியம் செலுத்துபவரா நீங்கள்..?? எந்த திட்டத்தில் முதலீடு செய்வது என்று தெரியலையா..?? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க..!!

அதாவது, “PPF திட்டம் 1968 இன் கீழ், ஒரு தனிநபர் தன்னுடைய பெயரில் ஒரே ஒரு PPF கணக்கு மட்டுமே திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது”. இந்த விதி அனைத்து வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. ஒருவேளை “நீங்கள் பல்வேறு கணக்குகள் திறந்து இருப்பது தெரிய வந்தால் முதல் கணக்கிற்கு பிறகு திறக்கப்பட்ட அனைத்தும் செயலற்றதாக கருதப்படுவது மட்டுமின்றி அதில் செய்த டெபாசிட்டுகளும் திரும்பி வழங்கப்படாது” என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக மைனர் குழந்தைக்காக நீங்கள் ஒரு பாதுகாவலரை போல செயல்பட்டு, தனியாக ஒரு PPF கணக்கு திறக்கலாம். “இந்த 2 கணக்கிலும் ஒரு நிதியாண்டுக்கான முதலீடு ரூ.1.5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் வருமான வரி பிரிவு 80 C இன் கீழ் நீங்கள் சில சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!