
மாதந்தோறும் ஓய்வூதியம் செலுத்துபவரா நீங்கள்..?? எந்த திட்டத்தில் முதலீடு செய்வது என்று தெரியலையா..?? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க..!!
அரசாங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் இருந்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையானது EPF அமைப்பில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஜூன் 2025 க்குள், தேசிய ஓய்வூதிய முறை (NPS) அல்லது புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (UPS) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்திய அரசு ஊழியர்கள் தேர்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த 2 திட்டங்களுக்கு இடையேயான முக்கிய வேறுபாடுகளை பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
இனி தமிழகத்திலும் மும்மொழிக்கொள்கை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!
அதாவது, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் (UPS) கீழ், ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் இருந்து 10% செலுத்துகின்றனர். இது அவர்களின் ஓய்வூதியத்தில் மேலும் 8.5% சேர்க்கிறது. இந்த “UPS திட்டமானது வாழ்நாள் முழுவதும் DA வுடன் சரி செய்யப்பட்டால், மாதத்திற்கு ரூ.84,658 நிலையான ஓய்வூதியமும், 60 வயதில் ரூ.8.45 லட்சம் மொத்த தொகையும் கிடைக்கும்”. இதுவே தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ், அரசாங்கம் உங்களது சம்பளத்தில் 14% பங்களிக்கிறது. இந்த வருமானம் பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்ட வருடாந்திரத் திட்டங்களை வைத்து செயல்படுத்துகிறது. எனவே, சந்தை நிலவரங்களை பொறுத்து உங்கள் வருமானம் ஏறலாம் அல்லது இறங்கலாம். இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தில் 25 ஆண்டுகள் முதலீடு செய்தால், உங்களுக்கு சுமார் ரூ.2.25 கோடி ஓய்வூதிய நிதி கிடைக்கும். எனவே உங்கள் நிதி தன்மை மற்றும் ஆற்றலை கருத்தில் கொண்டு ஏற்ற திட்டத்தை தேர்வு செய்து கொள்ளுமாறு நிதி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

























