தொழில் தொடங்க ஆசையா? மத்திய அரசு வழங்கும் சூப்பர் லோன்!
இந்தியாவில் சுய தொழில் தொடங்குதல் போன்றவற்றிற்கு கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மக்கள் அலுவலகங்களில் வேலை செய்வதை காட்டிலும் தொழில் முனைவதில்லை அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதை ஊக்குவிக்கும் வகையில் தொழில் தொடங்குபவர்களுக்கு கடன் வழங்குவதற்காக பிரதமர் முத்ரா யோஜனா திட்டம் பயன்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் வரை தொழில் கடன் வழங்குகிறது. மேலும் இந்த கடைத்தொகை விவசாயம் சாராத தொழில்களான உற்பத்தி, வணிகம், சேவை தொழில்கள் போன்றவற்றுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
குழந்தைக்கு ஏற்ற முதலீட்டுத் திட்டம் எது – உடனே தெரிஞ்சுக்கோ!
முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு அடையாள அட்டை, முகவரி சான்று, SC/ST/OBC/சிறுபான்மையினர் சான்றிதழ், நிறுவனத்தின் அடையாளச் சான்று,கடந்த 6 மாத வங்கி அறிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான பேலன்ஸ் ஷீட், நடப்பு நிதியாண்டின் விற்பனை விவரங்கள் போன்ற ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் சிஷு கடன் மூலம் ரூ.50,000 வரையும், கிஷோர் கடன் மூலம் ரூ.50,000 மேல் 5 லட்சம் ரூபாய் வரையும்,தருண் கடன் மூலம் 10 லட்சம் ரூபாய் வரையும் பெற்றுக்கொள்ள முடியும்.


























