H-1B விசா குழுக்கல் முறை ஆண்டு இறுதி வரை தொடரும் – அமெரிக்க அரசு அறிவிப்பு!!

0
H-1B விசா குழுக்கல் முறை ஆண்டு இறுதி வரை தொடரும் - அமெரிக்க அரசு அறிவிப்பு!!
H-1B விசா குழுக்கல் முறை ஆண்டு இறுதி வரை தொடரும் - அமெரிக்க அரசு அறிவிப்பு!!
H-1B விசா குழுக்கல் முறை ஆண்டு இறுதி வரை தொடரும் – அமெரிக்க அரசு அறிவிப்பு!!

அமெரிக்க அரசு சார்பில் H-1B விசா வழங்குவதற்கான நடைமுறை இந்த ஆண்டு டிசம்பர் வரை தொடரும் என அமெரிக்க நிர்வாகம் அறிவித்துள்ளது.

H-1B விசா அறிவிப்பு:

H-1B விசா மற்ற நாட்டு ஊழியர்கள் அமெரிக்காவில் வேலை செய்வதற்கு தற்காலிகமாக அனுமதி அளிக்க வழங்கப்படுகிறது. இந்த வகை விசாக்கள் குறிப்பிட்ட துறையில் திறன் பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். குடியேற்ற சட்டம்-1990 கீழ் H-1B விசாவுக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அனுமதி கொடுத்தார்.

தமிழகத்தில் உள்ள காவல் மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும் – முதல்வர் அறிவிப்பு!!

இந்நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர் பதவியின் இறுதி நாட்களில் H-1B விசா வழங்கும் முறையை குழுக்கல் முறையில் இருந்து தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் முறைக்கு மாற்றினார். இந்த உத்தரவு மார்ச் 9 ஆம் தேதி முதல் அமல்படுத்தபட இருந்தது. ஆனால் அதற்குள் அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய அதிபரான ஜோ பைடன், முன்னாள் அதிபரின் இந்த அறிவிப்பு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார்.

பயணிகள், சரக்கு ரயில் கட்டணம் அதிகரிப்பு – இந்திய ரயில்வே திட்டம்!!

இந்நிலையில் பழைய நிலையில் குழுக்கள் முறையில் H-1B விசா வழங்கும் முறை 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார். அமெரிக்காவில் H-1B விசா கேட்டு விண்ணப்பம் செய்யும் சுமார் 3 லட்சம் பேரில் குழுக்கல் முறையில் தகுதியுள்ள 90 ஆயிரம் பேருக்கு H-1B விசா வழங்கி வருவது குறிப்பிடத்தக்களது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!