
மீண்டும் ஊழியர்களை பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம்.. இந்த அதிரடி நடவடிக்கைக்கு காரணம் என்ன தெரியுமா..?
உலக அளவில் பிரபல இ-காமர்ஸ் நிறுவனமாக அமேசான் திகழ்கிறது. மேலும், இந்த நிறுவனமானது மின் வணிகம், கிளவுட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. மேலும், முன்னதாக அக்டோபர் 2024 இல், அமேசான் 14,000 நிர்வாகப் பதவிகளை 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதிக்குள் அகற்றத் திட்டமிட்டுள்ளதாக கூறியது. இந்நிலையில், இது தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, வருடாந்திர செலவு சேமிப்பை 2.1 – 3.6 பில்லியன் டாலர்கள் வரை அடைய, 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 14,000 நிர்வாகப் பதவிகளைக் குறைக்க அமேசான் திட்டமிட்டுள்ளது. இந்தக் குறைப்பு நிறுவனத்தின் உலகளாவிய மேலாண்மை பணியாளர்களில் 13 சதவீதத்தை குறைக்ககூடும். இதனால் மேலாளர்களின் எண்ணிக்கை 105,770 இருந்து 91,936 ஆகக் குறையும் என கூறப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் தகவல் தொடர்பு மற்றும் நிலைத்தன்மை பிரிவுகளில் முந்தைய பணிநீக்கங்களைத் தொடர்ந்து, செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் குழுக்களை மறுசீரமைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

























