மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – முழு கல்வி செலவையும் அரசே ஏற்கும்.. முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
வெளிநாட்டில் பயிலும் புதுச்சேரி மாணவ, மாணவியர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இந்த அறிவிப்பினால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மற்றும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கல்விக்கான செலவு:
மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது அதன் தொடர்ச்சியாக தற்போது கல்வி செலவும் அரசால் ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதாவது புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு கழகம் சார்பில் அபிஷேக பாகத்தில் அம்பேத்கரின் சிலை திறந்து வைக்கப்பட்டது.
தமிழகத்தில் நாளை (நவ.21) முக்கிய இடங்களில் மின்தடை – விவரங்கள் வெளியீடு!
இந்த நிகழ்வின் போது பேசிய புதுவை முதல்வர் ரங்கசாமி அம்பேத்கர் அவர்களின் பிறந்த, வாழ்ந்த மற்றும் படித்த இடங்கள் புனித ஸ்தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு செல்ல விரும்புவர்களுக்கான முழு செலவையும் அரசே ஏற்கும். அத்துடன் ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி பயின்றால் அவரகளுடைய கல்விக்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது.