விவேகானந்தன் முதல் பத்ம ஸ்ரீ விவேக் வரை – சின்ன கலைவாணர் கடந்து வந்த பாதை!!

0
விவேகானந்தன் முதல் பத்ம ஸ்ரீ விவேக் வரை - சின்ன கலைவாணர் கடந்த வந்த பாதை!!
விவேகானந்தன் முதல் பத்ம ஸ்ரீ விவேக் வரை - சின்ன கலைவாணர் கடந்த வந்த பாதை!!
விவேகானந்தன் முதல் பத்ம ஸ்ரீ விவேக் வரை – சின்ன கலைவாணர் கடந்த வந்த பாதை!!

பத்ம ஸ்ரீ விருதுக்கு சொந்தக்காரர், தமிழகத்தின் சின்ன கலைவாணர் நடிகர் விவேகானந்தன் என்கிற விவேக், மாரடைப்பு காரணமாக இன்று காலை 4:35 மணியளவில் மருத்துவமனையில் காலமானார்.  அவரது வாழ்க்கை பயணத்தை இப்பதிவில் காணலாம்.

நடிகர் விவேக்:

தமிழ் திரைப்படங்களில் சமூக அக்கறை கொண்ட ஒரே நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சொந்த ஊராக கொண்ட நடிகர் விவேக் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். சென்னையில் வேலை பார்த்து வந்த விவேக் மெட்ராஸ் நகைச்சுவை சங்கத்தில் பகுதிநேர நகைச்சுவை பேச்சாளராக இருந்து வந்தார். திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தருடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக அவரது இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தில் நடித்து சினிமா உலகுக்கு அறிமுகமானார்.

TN Job “FB  Group” Join Now

தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் பாலச்சந்தர், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல இயக்குனர்களின் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார் இவர். 90களில் நடிகர் அஜித்குமாரின் ‘காதல் மன்னன்’, ‘வாலி’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் நகைச்சுவை நடிகராக மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தார் இவர். தென் இந்திய சினிமாவின் நட்சத்திர நாயகர்களாக இருந்து வரும் ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களின் திரைப்படங்களில் காமெடியனாக நடித்துள்ளார் இவர்.

தற்காலிக பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு – தொழில் நிறுவனங்கள் நடவடிக்கை!!

கிட்டத்தட்ட 34 ஆண்டுகளாக கலைத்துறைக்கு தனது பங்களிப்பை கொடுத்துள்ள விவேக் இதுவரை 220 திரைப்படங்களுக்கு மேலாக நடித்து மக்களை மகிழ்வித்துள்ளார். வழக்கமான நகைச்சுவை நடிகர்களை போல அல்லாது நகைச்சுவை மூலம் சமூக அவலங்களையும், சமூகத்திற்கு தேவையான பல கருத்துக்களையும் மக்களுக்கு கொடுத்துள்ளார் இவர். பெண் சிசுக்கொலை, ஜாதி பிரச்சனை, மூட நம்பிக்கை போன்ற மக்கள் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களை கூட ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு பல கருத்துக்களை நகைச்சுவை மூலம் கொடுத்துள்ள ஒரே நடிகர் விவேக்.

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் – ரயில்வே துறை அறிவிப்பு!!

திரைப்படங்களில் இத்தகைய கருத்துக்களை சொல்வது மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அவ்வாறே வாழ்ந்து காட்டியவர் இவர். இளைஞர்கள், குழந்தைகள் என பெரிய பட்டாளத்தையே திரட்டி மரம் நடுதல், பொது இடங்களை சுத்தப்படுத்துதல் போன்ற பல சமூக சேவைகளையும் புரிந்துள்ளார் இவர். நடிகர் விவேக் அவர்களுக்கு சத்யபாமா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டத்தை கொடுத்து கௌரவித்தது. இந்திய சினிமாவுக்கு இவர் ஆற்றிய பெரும் பங்களிப்புக்காக மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது உட்பட மாநில அரசின் கலைவாணர் விருது, நடிகருக்கான 5 மாநில விருதுகள், சர்வதேச விருதுகளை வழங்கி கௌரவித்தது.

முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!!

தற்போது 59 வயதான நடிகர் விவேக் ஏப்ரல் 17 ஆம் தேதி காலை 4:35 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அன்னாரது திடீர் மறைவு தமிழ் திரையுலகிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் திரை பிரபலங்கள் ஆகியோர் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!