ஆதார் அப்டேட் செய்ய டிச. 14 கடைசி நாள்? – UIDAI முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் அனைத்து சேவைகளுக்கும் தேவையான முக்கிய ஆவணமான ஆதாரில் திருத்தங்கள் செய்வது குறித்து UIDAI முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆதார் அப்டேட்
இந்தியாவில் வங்கி கணக்கு தொடங்குவது முதல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கட்டாயம் ஆகும். அதனால் ஆதாரில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக இருப்பது அவசியம் ஆகும். இந்நிலையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதாரில் திருத்தங்கள் செய்ய டிச. 14 கடைசி நாள் என அறிவித்தது. அதற்கு பின் திருத்தங்கள் செய்ய கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்தது.
பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு – மசோதா இன்று தாக்கல்!
இந்நிலையில் இது குறித்த விளக்கத்தை UIDAI வெளியிட்டுள்ளது. அதாவது ஆதாரில் உள்ள முகவரி மற்றும் பிற விவரங்களை மாற்றுவதற்கு டிசம்பர் 14 கடைசி தேதி அல்ல என தெரிவித்துள்ளது. அதற்கு பின் உங்களுடைய விவரங்களை கட்டணம் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம் எனவும் டிச. 14 வரை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.