Competitive தேர்வுகளுக்கு தயாராவோருக்கான அரிய வாய்ப்பு – நாளை (ஆக.07) மாதிரி தேர்வு!
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் மூலம் வாரந்தோறும் நடப்பு நிகழ்வுகளுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பு நிகழ்வுகள்:
தமிழகத்தில் அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அந்தந்த துறை பணிகளுக்கு ஏற்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு முதல் கட்டமாக குரூப் 2, 2A தேர்வு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் குரூப் 4 & VAO தேர்வு நடைபெற்றது. தற்போது நடந்து முடிந்த குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகளை தேர்வர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்தாக குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கு ஆகஸ்ட் 22ம் தேதி வரை http://tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தொடர்ந்து அரசு போட்டித் தேர்வுகள் நடைபெற்று வருவதால் அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்று கனவோடு இருந்தவர்கள் தேர்வை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். அனைத்து போட்டித்தேர்விலும் நடப்பு நிகழ்வு வினாக்கள் கட்டாயம் கேட்கப்படும். அதனால் நடப்பு நிகழ்வுகளை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் நாளை (07 .08.2022) ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Weekly Current Affairs MT 32
Mock Test “WhatsApp Group” Join Now