
ஒரு நபர் எத்தனை பான் கார்டு பயன்படுத்தலாம் தெரியுமா..?? அப்போ தெரிஞ்சுக்கோங்க இல்லேன்னா ஆப்பு உங்களுக்கு தான்..!!
இந்தியாவில் ஆதார் கார்டை போலவே பான் கார்டு மிக முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. இந்த பான் கார்டு , வருமான வரித்துறை மூலம் வழங்கப்படும் 10 இலக்க எண்களை கொண்ட அடையாள ஆவணமாகும் . மேலும், இது இந்தியாவில் நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பெரிய தொகைகளை அனுப்புவதற்கு உதவிகிறது. இத்தகைய பான் கார்டு இல்லையென்றால் ஒரு நபரால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும் ஒரு நபர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு பான் கார்டு மட்டுமே பயன்படுத்த முடியும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.























