தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்:
தமிழக பட்ஜெட் தாக்கலை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் செய்துவரும் நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான எக்கச்சக்க அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது.
போட்டி தேர்வுகளுக்கு உறைவிட பயிற்சி மையம் – தமிழக பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு!
அந்த வகையில், தற்போது தமிழக அரசு பள்ளிகளை மேம்படுத்தும் விதமாக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும், கிட்டத்தட்ட ரூ.1000 கோடி செலவில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என நிதி அமைச்சர் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். அதேபோல, இல்லம் தேடி கல்வித் திட்டத்தையும் மேம்படுத்தும் விதமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.