உருவாகியது புதிய வருவாய் வட்டம்..!! ” தமிழக அரசு அறிவிப்பு”..!!
தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் முழு விவரங்களை கீழே காண்போம்.
சமூக வலைத்தளங்களில் போட்டோ பதிவிட்டால் 3 ஆண்டுகள் சிறையா..? வச்சான் பாரு ஆப்பு..!
சென்னை கொளத்தூர் வட்டத்தில் 3,78,168 பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும், கொளத்தூர் வட்டத்தில் இருந்து அயனாவரம் வருவாய் வட்டம் வரை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வருவாய் வட்டமானது, பொது பிரிவு, நகர்ப்புற நிலவரித் திட்டம், நில அளவை பிரிவு, சமூக பாதுகாப்பு பிரிவு, வட்ட கலால் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் அங்கு உருவாக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, கொளத்தூர், பேரவள்ளூர், சிருவள்ளுர் ஆகிய 3 வருவாய் கிராமங்களை ஆட்சி எல்லையாக கொண்டு கொளத்தூர் வருவாய் வட்டம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


























