சிலை கடத்தல் வழக்கு.. முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமீன் வழங்க CBI எதிர்ப்பு!!
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜியாக பொன். மாணிக்கவேல் பணியில் இருந்த காலகட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் காரணமாக அவருக்கு எதிராக, சிபிசிஐடி வழக்கு பதிவு செய்யக் கோரி பணியிடைநீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்ஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பு நேற்று (ஆகஸ்ட் 28) விசாரணைக்கு வந்தது.
உருவாகியது புதிய வருவாய் வட்டம்..!! ” தமிழக அரசு அறிவிப்பு”..!!
அப்பொழுது பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரித்தால்தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை தெரியவரும் என சிபிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டது. சிலை கடத்தல் காரர்களுக்கு உதவுவதற்காகவே சிலை கடத்தல் வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி காதர் பாட்ஷாவை பொய்யாக இந்த வழக்கில் சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டியது. மேலும் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


























