தமிழக அமைச்சரவையில் மீண்டும் இலாகா மாற்றம்..!! சற்றுமுன் வெளியான முக்கிய தகவல்..!!
தமிழக அமைச்சரவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி தங்களது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, தமிழக அமைச்சரவையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் அமைச்சரவையில் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.
இனி இந்தியாவிற்காக விளையாட போவதில்லை.. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோகித் சர்மா..!!
அதாவது, ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், ” முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரையின் படி, நீர்வளம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத்துறை பறிக்கப்பட்டு, சட்டத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த அமைச்சர் ரகுபதியிடம் வழங்கப்படுவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “ரகுபதியிடம் இருந்து சட்டத்துறை பறிக்கப்பட்டு துரைமுருகனிடம் வழங்கப்படுவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, இனிமேல் அமைச்சர் துரைமுருகன் நீர்வளம் மற்றும் சட்டத்துறையும், அமைச்சர் ரகுபதி கனிமவளத்துறையும் பார்த்துக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























