அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த அரசு – 2 லட்சம் பணியாளர்கள் அதிரடி பணி நீக்கம்?

0
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த அரசு - 2 லட்சம் பணியாளர்கள் அதிரடி பணி நீக்கம்?
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த அரசு - 2 லட்சம் பணியாளர்கள் அதிரடி பணி நீக்கம்?
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த அரசு – 2 லட்சம் பணியாளர்கள் அதிரடி பணி நீக்கம்?

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவலுக்கு பிறகு பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்க அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

பணி நீக்கம்:

உலகில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் உலக நாடுகளில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் படிப்படியாக அனைத்து நாடுகளும் பொருளாதார சரிவில் இருந்து மீண்டு வருகின்றன. ஆனால் இங்கிலாந்தில் பொருளாதார நெருக்கடி நிலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் இந்நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் என்பவர் பதவி ஏற்றுள்ளார்.

இதையடுத்து தற்போது நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை சரி செய்வதற்கான பணியில் இவர் இறங்கியுள்ளார். மேலும் இதற்காக பல்வேறு தரப்பினர்களிடம் இருந்து கருத்துக்களை கேட்டறிந்துள்ளார். இதில் குறிப்பாக பிரிட்டன் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான Institute for fiscal studies என்ற அமைப்பு ஆனது அரசின் செலவை குறைக்கும் விதமாக அரசு பணியாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட அரசு தற்போது அதிரடி முடிவை எடுத்துள்ளது.

பொதுமக்கள் கவனத்திற்கு.. இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய புது ரூல்ஸ் – கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

Exams Daily Mobile App Download

அதாவது, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதால் நடப்பு நிதி ஆண்டில் 5 பில்லியன் பவுண்ட் சேமிக்க உள்ளதாக திட்டமிட்டுள்ளது. மேலும் அரசாங்கத்தின் செலவினத்தை குறைப்பதற்காக அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி நடப்பு ஆண்டில் 1 லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். மேலும் மற்ற ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் வழங்கப்படாது. இதே போல் அடுத்த ஆண்டு நாட்டில் நிதி நெருக்கடி நிலை இருந்தால் அப்போது மேலும் 1 லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் முடிவு எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!