பொதுமக்கள் கவனத்திற்கு.. இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய புது ரூல்ஸ் – கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
நாடு முழுவதும் மக்களுக்கு அடிப்படை தேவைகளில் ஒன்றான சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு புதிய விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
புது விதிமுறைகள்
மக்கள் பலர் தற்போது எல்பிஜி சிலிண்டர்களை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். தங்கம் விலை போல சிலிண்டர் விலையும் அதிகரித்துக் கொண்டே சென்றாலும் அதன் தேவை அதிகமாக இருப்பதால் எவ்வளவு விலை என்றாலும் மக்கள் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிலிண்டர் வாங்க எண்ணிக்கையை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அது குறித்த புதிய விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் இனிமேல் வாடிக்கையாளர்கள் வருடத்திற்கு 15 சிலிண்டர்களுக்கு மேல் புக் செய்ய முடியாது. அதாவது ஒரு மாதத்தில் 2 சிலிண்டர்களுக்கு மேல் முன்பதிவு செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சிலிண்டர் புக் செய்ய மாதங்கள் ஆண்டுகள் என கணக்கீடு செய்யப்படவில்லை. ஆண்டிற்கு 12 சிலிண்டர் என்ற முறையே இருந்தது. ஆனால் தற்போது புதிய விதிமுறைகளின் படி ஆண்டிற்கு 15 சிலிண்டர்கள் எடுத்தால், 12 ஆம் தேதி தான் மானியம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு இந்த வாரம் ஜாலி தான் – பள்ளிக்கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு!
Exams Daily Mobile App Download
மேலும் அக் 1 ஆம் தேதி நிலவரப்படி, டெல்லியில் சிலிண்டர் விலை ரூ.1053 ஆகவும், பெங்களூரில் ரூ.1050 ஆகவும், மும்பையில் ரூ.1052.5 ஆகவும், சென்னையில் ரூ.1068.5 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மிஸ்டு கால் மூலமாக சிலிண்டர் புக் செய்யும் வசதியும் உள்ளது. அதற்கு நீங்கள் பதிவு செய்துள்ள மொபைல் நம்பரில் இருந்து 84549 55555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் அதில் வரும் லிங்க்கை கிளிக் செய்து, அதில் உங்களுடைய விவரங்களை கொடுத்து நீங்கள் சிலிண்டர் புக் செய்யலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்