வெளியானது அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு கலந்தாய்வு தேதி.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளங்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை 2025 தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும், “தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த மே 7 ஆம் தேதி தொடங்கி மே 27 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த கால அவகாசத்திற்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள் மற்றும் துணைத் தேர்வு எழுதும் மாணவர்கள் உயர்கல்வியில் சேரும் வகையில், வரும் மே 30 ஆம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்”. இந்நிலையில் அரசு கலை மற்றும் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடுதல் மற்றும் கலந்தாய்வு அட்டவணை வெளியாகியுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.., அமலுக்கு வரும் புதிய நடைமுறை., வெளியான முக்கிய தகவல்!!
அரசு கல்லூரி கலந்தாய்வு அட்டவணை 2025
- மே 29 ஆம் தேதி சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல்.
- மே 30 ஆம் தேதி பொதுப் பிரிவினருக்கான தரவரிசை பட்டியல்.
- ஜூன் 2 ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்கள் கலந்தாய்வு (மாற்றுத் திறனாளிகள் / விளையாட்டு வீரர்கள் / முன்னாள் இராணுவத்தினர் அந்தமான், நிகோபார் தமிழ் மாணாக்கர்கள் / தேசிய மாணவர் படை/ பாதுகாப்புப் படைவீரர்கள்).
- ஜூன் 3 ஆம் தேதி பொதுக் கலந்தாய்வு.
- ஜூன் 14 ஆம் தேதி தொடர் கலந்தாய்வு மற்றும் மாணக்கர் சேர்க்கை.
- ஜூன் 30 ஆம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்தாய்விற்கான தகவல்கள் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக அந்தந்த கல்லூரிகளிலிருந்து தெரிவிக்கப்படும் என்றும், மாணவர் சேர்க்கைக்கான விவரங்களை அந்தந்த கல்லூரிகளின் இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























