வீட்டில் இருந்தபடியே TNPSC தேர்விற்கு தயாராவது எப்படி?? இதை மட்டும் பாலோவ் பண்ணுங்க., அரசு வேலை உங்கள் கையில்!!
தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களும் தமிழ்நாடு பொதுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு நியமனம் செய்யப்படுகிறது. அந்த வகையில், தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள சுமார் 3935 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு வரும் ஜூலை 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. தற்போது வீட்டில் இருந்தபடியே எப்படி TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராவது என்பது குறித்து கீழே விரிவாக காண்போம்.
TNPSC Tamil Ilakkanam Kuril Nedil Study Materials – Free PDF Download
- முதலில், தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்னால் படிக்க துவங்காமல் குறைந்தது 6 மாதத்திற்கு முன்பு படிக்க துவங்க வேண்டும்.
- மேலும், ஒரே நாளில் பல பாடப்பகுதிகளை படித்து முடிக்க வேண்டும் என திட்டமிட கூடாது.
- ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடம் படித்தாலே நிச்சயமாக TNPSC தேர்வை எதிர்கொள்ளலாம்.
- முதலாவதாக, என்னென்ன பாடத்திட்டத்தை எப்போது படிக்க வேண்டும் என்பதை தெளிவாக அட்டவணை போட்டு அதன்படி பின்பற்ற வேண்டும்.
- மேலும், ஒரு பாடத்திட்டம் எடுத்து கொண்டால் அதில் இருக்கும் முக்கிய தகவல்களை சேகரித்து படிக்க வேண்டும்.
- அடுத்ததாக, முந்தைய ஆண்டு தேர்வு தாளை எடுத்து ஒவ்வொரு கேள்விகள் சம்மந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.


























