TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!! உடனே விண்ணப்பியுங்கள்.,
,
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குரூப் 4 பணிகளில் காலியாக உள்ள 3925 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 25ம் தேதி TNPSC தேர்வாணையம் வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, வரும் ஜூலை 12 தேதி இந்த குரூப் 4 தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (மே 24) கடைசி நாளாகும். நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிகலாம். மேலும் விண்ணப்பத்தை திருத்த மே 29ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
வி.ஏ.ஓ: 215
இளநிலை உதவியாளர்: 1678
இளநிலை வருவாய் ஆய்வாளர்: 239
இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்: 01
தட்டச்சர் (டைப்பிஸ்ட்) : 1099
வனக்காப்பாளர்: 62
விண்ணப்பிக்கும் வழிமுறை:
- TNPSC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் (www.tnpsc.gov.in) பார்வையிடவும்.
- விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதில் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பவும்.
- விண்ணப்பப் படிவத்தை உரிய ஆவணங்களுடன் (சான்றிதழ், புகைப்படம், கட்டணம்) பதிவு ஏற்றவும்.
- பிறகு உங்கள் விண்ணப்ப படிவம் ஏற்றுக்கொள்ளப்படும்.


























