UMANG ஆப் மூலம் பணம் எடுக்க முடியும் தெரியுமா? முழு விவரங்களுடன்!

0

UMANG ஆப் மூலம் பணம் எடுக்க முடியும் தெரியுமா? முழு விவரங்களுடன்!

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு அந்த நிறுவனங்கள் சார்பாக பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்து வருகிறது. இந்த தொகை அவர்கள் பெறும் ஊதியத்தை பொறுத்தது. இந்த தொகை பணி காலம் நிறைவடைந்த பின் மொத்தமாக நமக்கு திரும்ப கிடைக்கும். தற்போது தேவைக்கேற்ப தொகையை பணி காலத்திலே எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது.ஊழியர்கள் UMANG ஆப் மூலம் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் PF தொகையை எடுக்க முடியும்.

பர்சனல் லோன் வேணுமா? இது தெரியாம அப்ளை பண்ணாதீங்க!

முதலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து UMANG ஆப்-ஐ இன்ஸ்டால் செய்து பின்பு ரெஜிஸ்டர் செய்து லாகின் செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் நம்பருக்கு OTP அனுப்பப்படும். அதை என்டர் செய்து லாகின் செய்து ஹோம் பேஜ்-க்கு சென்று EPFO பிரிவில் கிளிக் செய்ய வேண்டும். ‘எம்பிளாய்-சென்ரிக் சர்வீசஸ்’ என்பதைக் கிளிக் செய்து, ‘ரெய்ஸ் க்ளைம்’ என்பதை செலக்ட் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து, கிளைம் பார்ம்-ஐ பூர்த்தி செய்ய வேண்டும், முழு பிஎஃப் தொகையை அல்லது அதில் ஒரு பகுதியை எடுக்க விரும்புகிறீர்களா என்பதை குறிப்பிட்டு பின் பணத்தை திரும்பப் பெறுவதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பித்து அதை ட்ராக் செய்ய முடியும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!