“சாதிவாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படும்”.. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
இந்தியாவில் சாமானிய மக்களுக்குக் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சம வாய்ப்பு, சம உரிமை வழங்க சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் எனக் கருதப்படுகிறது. எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். மேலும், முதல்வர் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது என அறிவிக்கப்பட்டது.
திடீரென ரத்து செய்யப்பட்ட பிரதமரின் ரஷ்யா பயணம்.. உள்துறை அமைச்சகம் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
இந்நிலையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எதிர்வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி விவரங்களும் சேர்க்கப்படும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் கடைசியாக 2011 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தளுக்கு முன்பாக மீண்டும் கணக்கெடுப்பு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


























