திடீரென ரத்து செய்யப்பட்ட பிரதமரின் ரஷ்யா பயணம்.. உள்துறை அமைச்சகம் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

0
??????? ????? ??????????? ????????? ????? ?????.. ??????? ????????? ????????? ??????? ?????..!!
திடீரென ரத்து செய்யப்பட்ட பிரதமரின் ரஷ்யா பயணம்.. உள்துறை அமைச்சகம் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

திடீரென ரத்து செய்யப்பட்ட பிரதமரின் ரஷ்யா பயணம்.. உள்துறை அமைச்சகம் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜி படையின் தோல்வியில் சோவியத் ஒன்றியத்தின் பங்கை நினைவுகூரும் வகையில் ரஷ்யாவில் வெற்றி தினம் ஆனது ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 80 ஆம் ஆண்டு வெற்றி கொண்டாட்டம் வரும் மே 9ஆம் தேதி துவங்கி 11ஆம் தேதி வரை மாஸ்கோவில் நடக்கவிருக்கிறது. இவ்விழாவில் உலக நாடுகளின் பல தலைவர்கள் பங்கேற்கும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஏப்ரல் மாத தொடக்கத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.

குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் வைக்க முதல்வர் வலியுறுத்தல்.. விரைவில் அதற்கான இணையதளம் தொடங்கப்படும் என அறிவிப்பு..!!

இந்நிலையில் பஹல்காம் தாக்குதல் காரணமாக இந்தியாவில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் பிரதமர் ரஷ்யாவில் நடைபெறும் மே தின வெற்றி விழா அணிவகுப்பில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிரதமர் மோடிக்கு பதிலாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யாவில் நடக்கும் இவ்விழாவில் கலந்து கொள்வார் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!