இந்தியாவும், பாகிஸ்தானும் மோதலை தவிர்க்க வேண்டும்…!! அமெரிக்கா வலியுறுத்தல்…!!
கடந்த சில நாட்களுக்கு முன் காஷ்மீரில் உள்ள பகல்ஹாம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பரிதமாக உயிரிழந்தனர். இதற்கு, பிண்ணனியில் பாகிஸ்தான் உள்ளதாக இந்திய அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில், அதனை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும், இரண்டு நாடுகளும் எல்லை பகுதிகளில் தங்களது ராணுவத்தை குவித்து வருகின்றனர். அத்துடன், இந்திய அரசு, முப்படைகளையும் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளதால் உலகளவில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக அமெரிக்கா அரசு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
“சாதிவாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படும்”.. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
அதாவது, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமெரிக்க செய்தி தொடர்பாளர், டாமி புரூஸ் “அமெரிக்கா பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ இன்னும் ஓரிரு தினங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களுடன் பேச உள்ளார். இந்தியா, பாகிஸ்தான் விவகாரத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வெளியுறவு துறை மட்டுமின்றி, பல்வேறு அளவுகளிலும் இருநாட்டு அரசுகளுடனும் பேச உள்ளோம்” என தெரிவித்தார். மேலும், “இரண்டு நாடுகளும் மோதலை தவிர்க்க வேண்டும் எனவும், பதற்றம் நிலவி வரும் சூழலில் இரண்டு நாட்டு அரசுகளுடனும் தொடர்பில் உள்ளதாகவும்” அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
Join the ExamsDaily WhatsApp Group


























