பஹல்காம் தாக்குதல் பற்றி பிரபல நாளிதழ் வெளியிட்ட கருத்து.. கண்டனம் தெரிவித்த அமெரிக்க அரசு..!!
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சுற்றுலா தலமான பஹல்காம் பகுதி பைசரனில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் சிக்கி 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். மேலும், இந்த நிகழ்வை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்கால் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து, பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையமாக கொண்டு செயல்படும் “லஷ்கர் இ தொய்பா” பயங்கரவாத அமைப்பின் “தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்” பொறுப்பேற்றுள்ளது.
பஹல்காம் தாக்குதல் பற்றி பிரபல நாளிதழ் வெளியிட்ட கருத்து.. கண்டனம் தெரிவித்த அமெரிக்க அரசு..!!
இந்நிலையில் “பகல்காமில் நடைபெற்ற தாக்குதலை போராளிகள் நடத்தியதாக பிரபல அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது”. இதற்கு அமெரிக்க அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதை தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீர் விவகாரம் குறித்து மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிடும் போது, இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருவதாகவும், தாக்குதல் குறித்த புரிதலின்றி பயங்கரவாதிகளை போராளிகள் என குறிப்பிட்டுள்ளதாகவும் ஊடக நிபுணர்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.


























