மக்களே உஷார்..தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு…!! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் புள்ளி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டது. மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் தெரிவித்தது. இந்நிலையில், தற்போது தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்று முதல் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், தமிழ்கத்தின் ஒரு சில இடங்களில் 7 முதல் 11 செ.மீ வரை மழைபொழிவிற்கு வாய்ப்பு உள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மழைக்கு வாய்ப்பில்லை என்றும் அறிவித்துள்ளது. அதேபோல், மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கை அறிவிப்பும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.


























