IPL 2025 PBKS vs LSG: போட்டியை தன்வசப்படுத்திய பஞ்சாப்..!! லக்னோ வீரருக்கு விதிக்கப்பட்ட அபராதம்..??

0
IPL 2025 PBKS vs LSG: போட்டியை தன்வசப்படுத்திய பஞ்சாப்.. லக்னோ வீரருக்கு விதிக்கப்பட்ட அபராதம்..
IPL 2025 PBKS vs LSG: போட்டியை தன்வசப்படுத்திய பஞ்சாப்.. லக்னோ வீரருக்கு விதிக்கப்பட்ட அபராதம்..

IPL 2025 PBKS vs LSG: போட்டியை தன்வசப்படுத்திய பஞ்சாப்..!! லக்னோ வீரருக்கு விதிக்கப்பட்ட அபராதம்..??

 

IPL 2025 தொடரின் 13 ஆவது லீக் ஆட்டம் நேற்று (01-04-2025) லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டிக்கான டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி “முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டு இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 16.2 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது”.

சுற்றுலா தலங்களில் பயணிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்.. ஊட்டிக்கு செல்ல அனுமதி மறுப்பு.. கொந்தளித்த வியாபாரிகள்..

இப்போட்டியில் லக்னோ அணி தரப்பில் நிக்கோலஸ் பூரன் (44), ஆயுஷ் பதோனி (41) ஆகியோர் அதிகபட்ச ரன்களை எடுத்தனர். மேலும், பஞ்சாப் அணியின் சார்பில் விளையாடிய பிரப்சிம்ரன் சிங் (69) ஸ்ரேயாஸ் அய்யர் (52), நேஹால் வதேரா (43) ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தனர். இதை தொடர்ந்து, பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் அதிரடியாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில், பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரியன்ஸ் ஆர்யாவின் விக்கெட்டை வீழ்த்தியதை வித்தியாசமாக கொண்டாடிய திக்வேஷ் ரதிக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 25% அபராதமும் 1 டிமெரிட் பள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, பஞ்சாப் அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!