அமெரிக்காவின் கல்வித்துறையை கலைக்க ட்ரம்ப் முடிவு..  மத்திய கல்வித்துறை இனி மாநிலங்கள் வசம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..

0
????????????? ????????????? ?????? ??????? ??????..  ?????? ??????????? ??? ?????????? ????.. ??????? ????????? ?????..
அமெரிக்காவின் கல்வித்துறையை கலைக்க ட்ரம்ப் முடிவு..  மத்திய கல்வித்துறை இனி மாநிலங்கள் வசம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..

அமெரிக்காவின் கல்வித்துறையை கலைக்க ட்ரம்ப் முடிவு..  மத்திய கல்வித்துறை இனி மாநிலங்கள் வசம்.. வெளியான அதிர்ச்சி தகவல்.

அமெரிக்காவின் கல்வித் துறை திறமையற்றது மற்றும் தாராளவாத சித்தாந்தங்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று டிரம்ப் அடிக்கடி விமர்சித்து வருகிறார். மேலும், அமெரிக்க கல்வி துறையில் மத்திய அரசின் மேற்பார்வையை குறைத்து அதற்கு பதிலாக , அதிகாரத்தை மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் டிரம்ப் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது இந்த விதியை நடைமுறை படுத்துவதற்கான நடவடிக்கையை டிரம்ப் தொடங்கியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கிரெடிட் கார்டுதாரர்களின் கவனத்திற்கு…,புதிய விதிகளை அறிவித்த SBI வங்கி …!! 

அதாவது, “அமெரிக்க கல்வித் துறையை மூடுவதற்கான நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், 1.6 ட்ரில்லியன் கல்வி கடன் தொகையை மத்திய கல்வித்துறை கவனித்து வருவதால் இந்நிலையை மாற்றி, அனைத்து நிர்வாகத்தையும் மாநில அரசிடமே ஒப்படைக்க மத்திய கல்வித் துறையை கலைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த செயல்முறையின் மூலம் இனி அமெரிக்காவை சார்ந்த பள்ளிகளின் அனைத்து செலவினங்களையும் மாகாண அரசுகளே ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்” என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!