நகைக்கடனில் சாமானிய மக்களுக்கு ஆப்படித்த ஆர்பிஐ…!! புதிய விதியால் பீதியில் நடுத்தர மக்கள்…!

0
??????????? ??????? ?????????? ????????? ??????...!! ????? ???????? ???????? ??????? ??????...!
நகைக்கடனில் சாமானிய மக்களுக்கு ஆப்படித்த ஆர்பிஐ...!! புதிய விதியால் பீதியில் நடுத்தர மக்கள்...!

நகைக்கடனில் சாமானிய மக்களுக்கு ஆப்படித்த ஆர்பிஐ…!! புதிய விதியால் பீதியில் நடுத்தர மக்கள்…!

இந்தியாவில் உள்ள நடுத்தர குடும்பங்களுக்கு  தங்கம் என்பது எட்டாக்கனியாக இருந்தாலும் கூட, மக்கள் அதன் விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் கடுமையாக முயற்சித்து சேமிக்க நினைக்கின்றனர். அதற்கு காரணம், மக்கள் அதனை ஆபத்து காலத்தில் உதவும் முதலீடாக காண்பது தான். ஏனெனில், நடுத்தர குடும்ப மக்கள் தங்களுக்கு தேவை ஏற்படும் போது அதனை வங்கி அல்லது தனியார் நிறுவனங்களில் அடகு வைத்து தங்களுக்கு தேவையான பணத்தை பெற்று கொள்கின்றனர். இந்நிலையில், மக்களின் இந்த செயல்முறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆர்பிஐயின்  புதிய விதிகள் அமைந்துள்ளன. அது குறித்து கீழே விரிவாக காண்போம்.
அதாவது,  ஆர்பிஐ அமல்படுத்த உள்ள  நகைக்கடனுக்கான  புதிய விதிகளின் படி, நகை அடகுக்கான கால அவகாசம் முடிந்த பின் வட்டியுடன் அசலையும் சேர்த்து கட்டி  நகைகளை மீட்டு மறு நாளே அடகு வைக்க முடியும். தற்போதைய விதிப்படி,  வட்டியை மட்டும் கட்டி உடனே மறு அடகு வைக்க முடியும். இந்நிலையில், இந்த புதிய விதியால் நடுத்தர மக்கள் வட்டிக்கு கடன் வாங்கி நகைகளை மீட்டு மறுநாள் அடகு வைக்கும் நிலை உருவாகியுள்ளது. என்னதான் நகைக்கடனில் நடக்கும் முறைக்கேடுகளை சரி செய்வதற்காக  ஆர்பிஐ இந்த விதிகளை உருவாக்கி இருந்தாலும், இது அமலுக்கு வந்தால் ஆண்டுத்தொறும் வட்டி மட்டும் கட்டி நகைக்கடனை புதுப்பித்து கொள்ளலாம் என்ற மக்களின் எண்ணத்தையும் அவர்களின் சேமிப்பையும் இது  உடைத்து விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!