
இனி இந்தியாவில் போலி பாஸ்போர்ட், விசாவிற்கு அனுமதில்லை.. மீறினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை .. மத்திய அரசு எச்சரிக்கை.
பாஸ்போர்ட் என்பது ஒரு அரசாங்கத்தால் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ பயண ஆவணமாகும். இது சர்வதேச பயணத்திற்கான ஒரு நபரின் அடையாளம் மற்றும் தேசியத்தை சரிபார்த்து, அவர்கள் வெளிநாடுகளுக்குள் நுழையவும் வெளியேறவும் அனுமதிக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் தொடர்பான விவகாரங்களை கையாள பாஸ்போர்ட் சட்டம், வெளிநாட்டினர் பதிவு சட்டம் உள்பட 4 சட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளன. இந்த 4 சட்டங்களுக்கு பதிலாக, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025 என்ற புதிய மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது உருவாக்கி உள்ளது. இந்நிலையில் இந்த புதிய மசோதாவின் முக்கிய விதிமுறை பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சாமானிய மக்களுக்கு ஒரு குட் நியூஸ்…ஏப்ரல் 1 லிருந்து 40 பொருட்களின் விலை அதிரடியாக குறையும் என தகவல்
அதாவது, “இந்தியாவில் நுழையவதற்கோ, தங்குவதற்கோ அல்லது வெளியேறவோ போலி பாஸ்போர்ட், விசா பயன்படுத்தினால் 7 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என புதிய குடியேற்ற மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்ட பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் நுழையும் வெளிநாட்டினருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படும்” என கூறப்படுகிறது.

























