சாமானிய மக்களுக்கு ஒரு குட் நியூஸ்…ஏப்ரல் 1 லிருந்து 40 பொருட்களின் விலை அதிரடியாக குறையும் என தகவல்

0
??????? ?????????? ??? ???? ??????...?????? 1 ???????? 40 ??????????? ???? ????????? ???????? ?? ?????
சாமானிய மக்களுக்கு ஒரு குட் நியூஸ்...ஏப்ரல் 1 லிருந்து 40 பொருட்களின் விலை அதிரடியாக குறையும் என தகவல்

சாமானிய மக்களுக்கு ஒரு குட் நியூஸ்…ஏப்ரல் 1 லிருந்து 40 பொருட்களின் விலை அதிரடியாக குறையும் என தகவல்

2025 -2026 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில், 40 பொருட்களுக்கான இறக்குமதி வரிகள் குறைக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், இவை வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரிகள்  15% லிருந்து 6% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

நீங்க வாங்கும் பொருளோட MRP விலைக்கு மேல் GST செலுத்துறீங்களா…?? அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க

மேலும், மொபைல் போன், LED மற்றும் LCD வகை தொலைக்காட்சிகளுக்கான இறக்குமதி வரிகள் 20% லிருந்து 15% ஆகவும், இறால், மீன் போன்ற கடல் உணவுகளுக்கான இறக்குமதி வரிகள் 15% லிருந்து 5% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், எலக்ட்ரிக் கார்கள், மிதிவண்டிகள் மற்றும் துருப்பிடிக்காத எஃகு ஆகியவற்றின் வரிகளும் குறைய உள்ளதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 36 முக்கிய மருந்துகளுக்கு அடிப்படை வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ உபகரணங்கள் மற்றும் புற்றுநோய் உட்பட உயிர்காக்கும் மருந்துகளின் வரியும் குறைய உள்ளதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!