நவம்பர் 30க்கு பிறகு OTP முறை நிறுத்தம்…. முழு விவரங்களுடன்!
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக நாடு வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. அதே சமயம் நூதன முறையில் நடைபெறும் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. போலியான பரிசுகள் வழங்குவது, ATM அட்டை Lock ஆகியுள்ளது என்று கூறி பல காலமாக மோசடிகள் நடத்தப்பட்டு வருகிறது. சில மோசடி நிறுவனங்கள் பொதுமக்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மோசடி செய்து வருகின்றனர்.
Cognizant நிறுவனத்தில் Associate காலிப்பணியிடங்கள் – ஜாக்பாட் வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
ஸ்பேம் அழைப்புகள் மற்றும் போலி எஸ்எம்எஸ்களை தடுக்க, அவற்றை அடையாளம் காண இந்திய தொலைத்தொடர்பு துறை ஆணையம் TRAI புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. இருப்பினும், ஏர்டெல், வோடபோன், ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் இந்த உத்தரவை முறையாகப் பின்பற்றவில்லை என்ற புகார்கள் உள்ளது. இந்த விதிகளை செயல்படுத்துவதற்கான கடைசி தேதி இந்த ஆண்டு டிசம்பர் 1 என்று TRAI தெரிவித்துள்ளது.

























