ஓய்வூதியதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட்… வரும் நிதியாண்டில் ரூ. 13, 449 கோடி ஒதுக்கீடு என தகவல்…!!
மத்திய அரசு நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது துணை மானிய கோரிக்கையை நேற்று (10.03.2025) நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்தது. அதில், உர மானியம், தொலைத்தொடர்பு , பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (UPS) போன்ற பல்வேறு துறைகளுக்காக ரூ. 51,463 கோடியை மானியமாக கேட்டு கோரிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதில் மிகப்பெரிய ஒதுக்கீடாக, ஓய்வூதிய திட்டத்திற்கு என ரூ. 13,449 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிலும், குறிப்பாக UPS திட்டத்திற்கு ரூ. 7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, இரண்டாவதாக உர துறைக்கு ரூ. 12,000 கோடியும், தொலைத்தொடர்பு துறைக்கு ரூ. 5337 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு நடப்பாண்டிற்கான முதல் துணை மானிய கோரிக்கையில் ரூ. 87,762 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றது குறிப்பிடத்தக்கது.


























