
மக்களே.. உங்களுக்கு டிமேட் அக்கவுண்ட் பற்றி தெரியுமா…??அப்போ முழு விவரத்தையும் தெரிஞ்சுக்க உடனே கீழே படிங்க…!!
நாம் பணத்தை கையில் தொகையாக வைத்திருக்காமல், வங்கி கணக்குகளில் செலுத்தி, டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் மாற்றவும், எடுக்கவும் செய்கிறோம். அதேபோல், டிமேட் அக்கவுண்ட் என்பது பங்கு சந்தைகளில் வழங்கப்படும் பங்குகளை வரவு வைக்கும் கணக்காகும். மேலும், நம்முடைய சாதாரண வங்கி கணக்கை போல், இதுவும் மின்னணு முறையில் இயங்கும் டிஜிட்டல் தளமாக செயல்படுகிறது.
இதற்கு, முன்னதாக பங்குகளை வரவு வைக்க பத்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது பங்கு சந்தை வழிகாட்டி மையமான செபி, டிமேட் கணக்குகள் என்ற புதிய மின்னணு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், தற்போது பங்குகளை வாங்கவோ, விற்கவோ டிமேட் கணக்குகள் கட்டாயம் தேவைப்படுகின்றன. அதேபோல், இந்த டிமேட் கணக்கில் நாமினிகளையும் சேர்த்து கொள்ளலாம். மேலும், இந்தியாவில் NSDL மற்றும் CDSL ஆகிய தேசிய வங்கிகளில் இந்த டிமேட் கணக்குகள் திறக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

























