உங்களது ஆதாரை பயன்படுத்தி மோசடிகள் எதுவும் நிகழாமல் தடுக்க வேண்டுமா..? அப்போ கண்டிப்பா இந்த வழிமுறைகள் பற்றி தெரிஞ்சுங்கோங்க…

0
உங்களது ஆதாரை பயன்படுத்தி மோசடிகள் எதுவும் நிகழாமல் தடுக்க வேண்டுமா..? அப்போ கண்டிப்பா இந்த வழிமுறைகள் பற்றி தெரிஞ்சுங்கோங்க...
உங்களது ஆதாரை பயன்படுத்தி மோசடிகள் எதுவும் நிகழாமல் தடுக்க வேண்டுமா..? அப்போ கண்டிப்பா இந்த வழிமுறைகள் பற்றி தெரிஞ்சுங்கோங்க...

உங்களது ஆதாரை பயன்படுத்தி மோசடிகள் எதுவும் நிகழாமல் தடுக்க வேண்டுமா..? அப்போ கண்டிப்பா இந்த வழிமுறைகள் பற்றி தெரிஞ்சுங்கோங்க…

 

இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. மேலும், பெரும்பாலான அரசுப் பணிகளை மேற்கொள்ள ஆதார் அட்டை அவசியம். இந்நிலையில் சில மோசடி செய்பவர்கள் ஆதாரை தவறாக பயன்படுத்துகின்றனர். எனவே, உங்கள் ஆதாரை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருக்க பயோமெட்ரிக் லாக் மூலம் பாதுகாக்கும்  வழிமுறைகளை பற்றி இப்பதிவில் காண்போம்.

அதாவது, ஆதார் பயோமெட்ரிக் லாக் என்பது உங்கள் கைரேகை, கருவிழி போன்ற விவரங்களை பயன்படுத்தி உங்களது ஆதாரை தவறான அணுகளில் இருந்து பாதுகாக்க UIDAI-ஆல் தொடங்கப்பட்ட ஒரு பாதுகாப்பு அம்சமாகும். இதை UIDAI போர்டல் அல்லது mAadhaar ஆப் மூலம் யூசர்கள் எந்த நேரத்திலும் தங்களது பயோமெட்ரிக்ஸை லாக் அல்லது அன்லாக் செய்யலாம். இந்த பயோமெட்ரிக் லாக்கை mAadhaar ஆப், UIDAI வலைத்தளம் அல்லது SMS சேவை (1947) ஆகியவற்றைப் பயன்படுத்தி அணுகலாம்.

மேலும், உங்களது ஆதாரை இணையதளம் வாயிலாக லாக் செய்ய, UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்தில் லாகின் செய்து ‘VID ஜெனரேட்டர்’ மூலம் ஆதார் விர்ச்சுவல் ஐடியை (VID) உருவாக்க வேண்டும். மேலும், mAadhaar ஆப் மூலம் ஆதார் பயோமெட்ரிக்ஸை லாக் செய்ய mAadhaar செயலியை பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள ‘My Aadhaar’ ஐகானைக் தேர்வு செய்து  ‘பயோமெட்ரிக் லாக்’ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்வதன் மூலம் உங்கள் ஆதாரை லாக் செய்யலாம். இதை தொடர்ந்து, SMS வழியாக ஆதார் பயோமெட்ரிக்ஸை லாக் செய்ய விரும்புவார்கள் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து GETOTP (ஸ்பேஸ்) ஆதாரின் கடைசி 4 இலக்கங்களை 1947 என்ற எண்ணுக்கு அனுப்பி OTP-ஐ சரிபார்க்கவும். பின்னர் LOCKUID (ஸ்பேஸ்) உங்கள் ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள் (ஸ்பேஸ்) 6-டிஜிட் OTP ஆகியவற்றை டைப் செய்து 1947 என்ற எண்ணுக்கு   மற்றொரு செய்தியை அனுப்பவும். இதுவே உங்கள் போன் நம்பர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டிருந்தால், கடைசி 4 டிஜிட்களுக்கு பதிலாக கடைசி 8 டிஜிட்களைப் பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!