தமிழக அரசு வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு..!! பால் உற்பத்தியாளர்களே இனி உங்களுக்கு கவலையே வேண்டாம்…!!

0
தமிழக அரசு வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு..!! பால் உற்பத்தியாளர்களே இனி உங்களுக்கு கவலையே வேண்டாம்...!!
தமிழக அரசு வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு..!! பால் உற்பத்தியாளர்களே இனி உங்களுக்கு கவலையே வேண்டாம்...!!

தமிழக அரசு வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு..!! பால் உற்பத்தியாளர்களே இனி உங்களுக்கு கவலையே வேண்டாம்…!!

தமிழக அரசு சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நல நிதியத்தின் கீழ் பால் உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு மற்றும் இதர நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சீனாவிடம் தொடர்ந்து தோல்வியை சந்திக்கும் அமெரிக்கா.. கூகுளின் சூப்பர் கணினியை பின்னுக்கு தள்ளிய சீனாவின் புதிய கண்டுபிடிப்பு.

அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பால் உற்பத்தியாளர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அவர்களது குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ரூ.25,000 இருந்து ரூ.50,000  உயர்த்தப்பட்டுள்ளது   என்றும், ஒரு பெண் குழந்தைக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ரூ.30,000 இருந்து ரூ.60,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, விபத்தில் மரணம் அடைந்தவர்களின் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை ரூ.5000 இருந்து ரூ.25.000 கொடுக்கப்படும்  என்றும்,  இதுவே ஊனமுற்ற பால் உற்பத்தியாளர் விபத்தில் ஓர் உறுப்பை இழந்தால் ரூ.1 லட்சமும், 2 உறுப்பை இழந்தால் ரூ.2.25 லட்சமும் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது  . இதை செயல்படுத்த பால் ஊற்றும் உறுப்பினர்களிடம் இருந்து மாதத்துக்கு பெறப்படும் சந்தா தொகையில் ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!