
TMB வங்கியில் ரூ. 48,000 ஊதியத்தில் வேலை…!! 124 காலிப்பணியிடங்கள்…!! விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ…
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் (TMB) காலியாக உள்ள மூத்த வாடிக்கையாளர் சேவை நிர்வாக பதவிக்கான (SESC) அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. மேலும், இதற்கென 124 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
TMB காலிப்பணியிடங்கள்:
இந்தியா முழுவதும் உள்ள TMB வங்கியில் மொத்தம் 124 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TMB கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்று இளங்கலை பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
RRB குரூப் D பிரிவில் 32,438 காலிப்பணியிடங்கள்…!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..|| உடனே விரையுங்கள்..!!
TMB வயது வரம்பு:
30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
TMB ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 48,000 மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.
TMB தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
TMB விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் TMB வங்கியின் https://www.tmbnet.in/ என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும், இப்பணிக்கு விண்ணப்பிக்க 16-03-2025ம் தேதியே இறுதி நாளாகும். எனவே, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

























