“முடிச்சு விட்டாங்க போங்க”…! முடிவுக்கு வரும் ஸ்கைப் தளம்…!! மைக்ரோசாஃப்ட் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு…!!

0
"முடிச்சு விட்டாங்க போங்க"...! முடிவுக்கு வரும் ஸ்கைப் தளம்...!! மைக்ரோசாஃப்ட் நிர்வாகம் எடுத்த அதிரடி அறிவிப்பு...!!
"முடிச்சு விட்டாங்க போங்க"...! முடிவுக்கு வரும் ஸ்கைப் தளம்...!! மைக்ரோசாஃப்ட் நிர்வாகம் எடுத்த அதிரடி அறிவிப்பு...!!

“முடிச்சு விட்டாங்க போங்க”…! முடிவுக்கு வரும் ஸ்கைப் தளம்…!! மைக்ரோசாஃப்ட் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு…!!

 

ஸ்கைப் (Skype) என்பது உரையாடல்களை இயக்கும் மென்பொருளாகும். மேலும், 2003ஆம் ஆண்டு, வாய்ஸ் கால் செயலியாக அறிமுகமான ஸ்கைப் செயலியை 2011ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கைப்பற்றியது. பின்னர், வீடியோ கால் செயலியாக அப்டேட் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் ஆன்லைன் உரையாடல்கள் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ஸ்கைப் செயலியின் சேவை நிறுத்தம் பற்றி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, “மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனம் தனது பிரபல வீடியோ அழைப்பு செயலியான ஸ்கைப்பை மே 5 ஆம் தேதி முதல் நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், கொரோனாவிற்கு பின் Zoom, வாட்ஸ்அப் வீடியோ கால் உள்ளிட்ட பல செயலிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதால் ஸ்கைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளடைவில் குறைந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, பயனர்கள் தங்கள் ஸ்கைப் கணக்குகளை டீம்ஸ் செயலியுடன் இணைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது”.

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!