IPPB வங்கியில் ரூ. 30,000 ஊதியத்தில் வேலை…50+ காலிப்பணியிடங்கள்…உடனே விண்ணப்பியுங்கள்

0
IPPB வங்கியில் ரூ. 30,000 ஊதியத்தில் வேலை...50+ காலிப்பணியிடங்கள்...உடனே விண்ணப்பியுங்கள்
IPPB வங்கியில் ரூ. 30,000 ஊதியத்தில் வேலை...50+ காலிப்பணியிடங்கள்...உடனே விண்ணப்பியுங்கள்

IPPB வங்கியில் ரூ. 30,000 ஊதியத்தில் வேலை…50+ காலிப்பணியிடங்கள்…உடனே விண்ணப்பியுங்கள்

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் (IPPB) இல் காலியாக உள்ள எக்ஸ்கியூடிவ் பணிக்கான வேலைவாய்ப்பு குறித்த  அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, இதில் மொத்தம் 51 எக்ஸ்கியூடிவ் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

IPPB காலிப்பணியிடங்கள்:

இந்தியா முழுவதும் மொத்தம் 51 எக்ஸ்கியூடிவ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TMB வங்கியில் ரூ. 48,000 ஊதியத்தில் வேலை…!! 124 காலிப்பணியிடங்கள்…!! விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ…

 வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IPPB ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 30,000 மாத ஊதியம் வழங்கப்படுகிறது.

 தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் மெரிட் லிஸ்ட் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

IPPB விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் IPPB வங்கியின்  https://www.ippbonline.com/ என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.மேலும், இதற்கு விண்ணப்பிக்க 21-03-2025-ம் தேதியே இறுதிநாளாகும். எனவே, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்  கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!