“உக்ரைன் அதிபரால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம்”.. ஜெலன்ஸ்கிக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை ..
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர தொடர்ந்து முயற்சித்து வருகிறார். மேலும், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுடனும், ரஷ்யா அதிகாரிகளுடனும் போரை நிறுத்துவது குறித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு தெரிவித்த நிலையில், நேற்று அவரை ட்ரம்ப் சந்தித்தார்.
2025-26 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்… பிறந்த நாளில் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்..
மேலும், இந்த சந்திப்பு டிரம்ப், ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இடையே நடந்தது. இச்சந்திப்பில் “உக்ரைன் போருக்கு இனி செலவு செய்ய அமெரிக்கா தயாராக இல்லை என்றும், அமெரிக்கா செலவழித்த பணத்தை உக்ரைன் தர வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். இதை தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியால் மூன்றாம் உலகப்போரை மூளும் அபாயம் உள்ளதாகவும், ரஷ்யா உடனான போரில் உக்ரைன் வெல்லாது என ஆத்திரமூட்டும் வகையில் ஜெலன்ஸ்கியிடம் தெரிவித்ததால் வெள்ளை மாளிகை பரபரப்பு ஏற்பட்டது”.


























