உங்களின் பிளாக் செய்யப்பட்ட கிரெடிட் கார்டை மீட்டெடுக்கணுமா..? அப்போ இதை மட்டும் பண்ணுங்க..!!
கிரெடிட் கார்டு என்பது உங்களின் எதிர்பாராத நிதி தேவைகளை நிவர்த்தி செய்ய உதவும் கடனுதவி அட்டையாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எந்த கூடுதல் செயல்முறையோ அல்லது தடையோ இல்லாமல் வங்கியிலிருந்து கடன் பெற முடியும். மேலும், சில வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் கார்டுகளை அரிதாகவே பயன்படுத்துவதால் இந்த கார்டுகள் செயலற்றதாக மாறிவிடுகிறது. இவ்வாறு செயலிழந்த கிரெடிட் கார்டுகளை மீண்டும் எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றி இப்பதிவில் காண்போம்.
தமிழகத்தில் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு…!! எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!
அதாவது, பயனளரின் கிரெடிட் கார்டில் இருப்பு பரிமாற்றம், கொள்முதல் அல்லது ரொக்க முன்பணம் போன்ற எந்த ஒரு செயலும் நடக்காமல் இருந்தால் கிரெடிட் கார்டு செயலற்றதாக மாறிவிடும். இந்த செயலற்ற கிரெடிட் கார்டுகள் உங்கள் கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கலாம். இவ்வாறு செயலற்ற கிரெடிட் கார்டை மீண்டும் செயல்படுத்துவதற்கான கோரிக்கைக்கு அருகிலுள்ள வங்கி கிளையை அணுகவும். பின்னர் வங்கி அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி சில செயல்முறைகளை பின்பற்றி அடையாள சரிபார்ப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட KYC விவரங்களை பூர்த்தி செய்வதன் மூலம் செயலற்ற கிரெடிட் கார்டுகளை மீட்டெடுக்க முடியும். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் சில சமயங்களில் நீங்கள் ஏதேனும் ஆன்லைன் பரிவர்த்தனை அல்லது ATM மூலம் பணம் எடுப்பது போன்ற செயல்முறைகளை மேற்கொள்வதன் மூலம் சில வங்கிகள் செயலற்ற கிரெடிட் கார்டுகளை மீண்டும் செயல்படுத்தவும் வாய்ப்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


























