
உங்க ரேஷன் கார்டிலிருந்து உறுப்பினர் பெயரை நீக்கனுமா..? அப்போ இந்த வழிமுறைகள் பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..
ரேஷன் கார்டு என்பது மக்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்க மாநில அரசுகளால் கொடுக்கப்படும் அதிகாரப்பூர்வ ஆவணமாகும். மேலும், இந்த ரேஷன் கார்டுகள் இந்தியாவில் வசிக்கும் குடும்பங்களின் அத்தியாவசிய குடியுரிமை அடையாளமாகவும் திகழ்கிறது. இந்நிலையில் ரேஷன் கார்டில் இருந்து உறுப்பினர் பெயரை நீக்குவதற்கான செயல்முறைகள் பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.
தமிழக மாணவர்களுக்கு மார்ச் 4 தேதி விடுமுறை அறிவிப்பு….!! அரசு அதிரடி அறிவிப்பு…!!
இதற்கு “முதலில் தமிழ்நாடு பொது விநியோக அமைப்பு (TNPDS) இணையதளமான tnpds.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லவும். அதன் பின்னர் மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும். அதை தொடர்ந்து குடும்ப உறுப்பினர் நீக்கம்” என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்த பின்னர் உங்கள் கைபேசி எண்ணை உள்ளிட்டவுடன் உங்களுக்கு தனிப்பட்ட ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். அதன் பின்னர் உறுப்பினரை நீக்குவதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுத்து கூறப்பட்டுள்ள ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். இறுதியாக நீங்கள் சமர்ப்பித்த விண்ணப்பத்திற்கான ஒப்புகை ரசீது பதிவிறக்கம் செய்து உங்களின் விண்ணப்பத்தின் நிலையை கண்காணிக்கலாம். இந்த செயல்முறைகள் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், TNPDS உதவி எண்ணை (1967 அல்லது 1800-425-5901) தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.























