கிரெடிட் கார்டு புள்ளிகளை எப்படி கிளைம் செய்வது? முழு விவரங்களுடன்!
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் அனைத்தும் டிஜிட்டல் மாயமாகியுள்ளது. இதனால் பண பரிவர்த்தனைகள் அதிக அளவில் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அவ்வாறு ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் கேஷ்பேக் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கிரெடிட் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. கிரெடிட் கார்டு பரிவர்த்தனையின் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும், யூசர் வெகுமதி புள்ளிகள் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் “இந்த” மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – காரணம் தெரியுமா?
சில கிரெடிட் கார்டுகள் ஒரு குறிப்பிட்ட வருடத்தில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை செலவிட்டவுடன் போனஸ் புள்ளிகள் வழங்குகிறது. பிரீமியம் கிரெடிட் கார்டுகள் பெரும்பாலும் அதிக வெகுமதி புள்ளிகளை வழங்குகின்றன. கிரெடிட் கார்டு வெகுமதி புள்ளிகளை Redeem செய்ய உங்கள் கிரெடிட் கார்டு வழங்குநருக்கான ஆன்லைன் வங்கி போர்ட்டலில் லாகின் செய்து, ஒரு ஐடி எண் மற்றும் Password வழங்கவும். வெகுமதிகளைப் பெறுவதற்கான உங்கள் விருப்பங்களை சரிபார்க்கவும். நீங்கள் பொருட்கள் அல்லது வவுச்சரை தேர்வு செய்ததும், ஆர்டரை உறுதி செய்வதன் மூலம் Redeem செய்யலாம்.























